news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news குடும்ப பகையால் சிறுவனுக்கு கொடூரம், வெளியான மர்ம முடிச்சுகள்
tv

Also Watch

tv

Read this

குடும்ப பகையால் சிறுவனுக்கு கொடூரம், வெளியான மர்ம முடிச்சுகள்

தௌசா, ராஜஸ்தான்

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என புகாரளித்த தாய். சிறுவனை பல இடங்களில் தேடி அலைந்த போலீஸ். எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் வழக்கை கிடப்பில் போட்ட காவலர்கள். கிட்டத்தட்ட 6 வருடங்கள் கழித்து சிறுவனை கொலை செய்து சடலத்தை புதைத்ததாக மதுபோதையில் உறவினர்களிடம் உளறி கொட்டிய சித்தப்பா. சித்தப்பாவை கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸ். அடுத்தடுத்த விசாரணையில் வெளியான பகீர் தகவல். அண்ணன் மகனை கொடூரமாக கொலை செய்தது ஏன்? 6 வருடங்களுக்கு பிறகு வெளியான மர்மப் பின்னணி என்ன?

* வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பிரின்ஸ்
* சிறுவனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார்
* புகாரையடுத்து பல இடங்களில் தேடி அலைந்த போலீஸ்


2020ஆம் ஆண்டு, வீட்டு வாசல்ல சக நண்பர்களோட விளையாடிட்டு இருந்தான் பிரின்ஸ். அப்ப சிறுவனோட தாய் ஹோம் ஒர்க் பண்ண கூப்டுருக்காங்க. ஆனா சிறுவன் கிட்ட இருந்து எந்த ஒரு சத்தமும் வரல. இதனால சிறுவனோட தாய், வீட்டு வாசல்ல போய் பாத்துருக்காங்க. அங்க சிறுவன் இல்லை. இதனால பதற்றமான பெண், தன்னோட மகன தேடி பல இடங்கள்ல அலைஞ்சுருக்காங்க. அண்ணன் மகன காணும்ன்னு சித்தப்பா அனிலும் அவரோட மனைவியும் பல இடங்கள்ல தேடிருக்காங்க. ஆனா சிறுவன் எங்கு தேடியும் கிடைக்கல. இதனால தௌசா போலீஸ் ஸ்டேஷன்ல மகன காணும்ன்னு புகார் அளிச்சுட்டாங்க சிறுவனோட தாய். உடனே அந்த புகார வாங்குன போலீஸ் சிறுவன் படிச்ச ஸ்கூல், உறவினர்கள் வீடுன்னு எல்லா இடங்களையும் தேடி பாத்தாங்க. அடுத்து அந்த ஏரியாவுல உள்ள சிசிடிவி காட்சிகளையும் எடுத்து ஆய்வு பண்ணாங்க. ஆனா எங்க தேடியும் சிறுவன் கிடைக்கல.

* சிறுவன் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகப்பட்ட போலீஸ்
* 6 ஆண்டுகளுக்கு பின் வெளியான மர்ம முடிச்சுகள்
* மதுபோதையில் இருந்த சித்தப்பா அனிலை கஸ்டடியில் எடுத்த போலீஸ்


இதனால சிறுவனோட பெற்றோர் கிட்ட இருந்து விசாரணைய ஸ்டார்ட் பண்ணிருக்காங்க போலீஸ். சிறுவன எல்லா இடத்துலையும் தேடி பாத்துட்டோம் ஆனா எங்க தேடியும் கிடைக்கல, ஒருவேளை சிறுவன் பணத்துக்காக கடத்தப்பட்டிருக்கலாம்ன்னு சொல்லிருக்காங்க. உங்களுக்கு யார் கூடயாவது முன்பகை இருக்கா? உங்களுக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்கான்னும் போலீஸ் கேட்ருக்காங்க. அதுக்கு சிறுவனோட தாய், நாங்க எல்லார் கிட்டயும் அன்பா தான் பழகுவோம், அதனால எங்களுக்கு எதிரின்னு யாருமே கிடையாதுன்னு சொல்லிருக்காங்க. சிறுவன பத்தி எந்த ஒரு துப்பும் கிடைக்காததால சிறுவன கண்டு பிடிக்க முடியாம போலீஸ் திணற ஆரம்பிச்சாங்க. அடுத்து இந்த வழக்க அப்படியே கிடப்புலையும் போட்டுட்டாங்க. இப்படியே 6 ஆண்டுகள் முடிஞ்சுருச்சு. இந்த நிலையில சிறுவனோட சித்தப்பா அனில் தன்னோட உறவினர்கள் கூட உட்காந்து மது குடிச்சுட்டு இருந்தாரு. அப்ப ஃபுல் போதையில வாய் உளற ஆரம்பிச்ச அனில், நான் தான் 6 வருஷத்துக்கு முன்னாடி அண்ணன் மகன் பிரின்ஸ்ஸ கொலை பண்ணி, சடலத்த புதைச்சேன்னு சொல்லி அங்கிருந்தவங்கள அலறவச்சுருக்காரு.

* அனிலுக்கும் அவரது அண்ணன் குடும்பத்திற்கும் இருந்த சண்டை
* நீண்ட நாட்களாக இருந்த குடும்ப சண்டை மற்றும் சொத்துத் தகராறு
* சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க கூறிய அனில்


இதகேட்டு பதற்றமடைஞ்ச உறவினர்கள் போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிட்டாங்க. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சித்தப்பா அனில்ல கஸ்டடியில எடுத்து விசாரிச்சாங்க. அதுல தான் சிறுவன் பிரின்ஸ் கொலை செய்யப்பட்டதற்கான காரணமும், அந்த கொலைக்கு பின்னால் ஒளிஞ்சுருக்குற மர்மமும் ஒன்னு ஒன்னா வெளியில வந்துச்சு.
ராஜஸ்தான்ல உள்ள தௌசா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனில். இவருக்கு கல்யாணமாகி குழந்தைங்க இருக்குன்னு கூறப்படுது. இவருக்கும் இவரோட அண்ணனுக்கும் நீண்ட நாட்களாக குடும்ப பகை இருக்கு. இதனால ரெண்டு குடும்பமே பேசிக்க மாட்டங்கன்னு கூறப்படுது. அனிலோட அண்ணன் துபாயில வேலை பாத்துட்டு இருந்துருக்காரு. இதுக்கிடையில அனில் தன்னோட பெற்றோர் கிட்ட, என் குடும்பம் ரொம்ப கஷ்டத்துல இருக்கு அதனால உங்க பேருல இருக்க எல்லா சொத்தையும் என் பேருக்கு எழுதி வச்சுருக்கங்னன்னு சொல்லிருக்காரு. அதுக்கு பெற்றோர், எல்லா சொத்தையும் உன் பேருக்கு எப்படி எழுதி வைக்க முடியும், உங்க அண்ணனுக்கும் அதுல பங்கு கொடுக்கனும்ன்னு சொல்லிருக்காங்க.

* தனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் எனக்கூறிய அண்ணன்
* அண்ணன் குடும்பத்தை பழிவாங்க திட்டம் போட்ட தம்பி
* அண்ணன் மகன் பிரின்ஸை கொ* செய்ய திட்டம்


இதனால கடும் கோபமான அனில் தன்னோட அண்ணனுக்கு ஃபோன் பண்ணி சண்டை போட்ருக்காரு. அப்பா, அம்மா பெயருல இருக்குற எல்லா சொத்தும் எனக்கு மட்டும் தான் சொந்தம், அதுல நீங்க பங்கு கேட்டு வரக்கூடாதுன்னு சொல்லிருக்காரு. இதனால ரெண்டு பேருக்கும் ஃபோன்லையே பயங்கர சண்டை ஏற்பட்டிருக்கு. ஏற்கனவே இவங்களுக்குள்ள இருந்த குடும்ப பகையும் தற்போது ஏற்பட்ட சொத்து பிரச்னையும் அனில இன்னும் ஆத்திரமடைய வச்சுருக்கு. இதனால கொலை வெறியோட வீட்டுக்கு போன அனில் நடந்த எல்லாத்தையும் தன்னோட மனைவி கிட்ட சொல்லிருக்காரு. அடுத்து அண்ணன் குடும்பத்த சும்மா விடக்கூடாது, அவன் வாழ்க்கையில மறக்க முடியாத அளவுக்கு அவங்களுக்கு பெரிய பாடம் புகட்டனும்ன்னு நினைச்சு, அண்ணன் மகன் பிரின்ஸ்ஸ கொலை செய்ய திட்டம் போட்ருக்காங்க. சம்பவத்தன்னைக்கு சிறுவன் பிரின்ஸ் வீட்டு வாசல்ல விளையாடிட்டு இருந்துருக்கான்.

* சிறுவனை கழுத்தை அறுத்துக் கொ* செய்த தம்பதி
* விரைவுச்சாலையில் சடலத்தை குழிதோண்டி புதைத்த பயங்கரம்
* அனில் மற்றும் அவரது மனைவியை கைது செய்த போலீஸ்

அப்ப சிறுவன அங்கருந்து கடத்திட்டு வீட்டுக்கு போன அனிலும் அவரோட மனைவியும் சிறுவன கழுத்த நெரிச்சு கொடூரமாக கொன்னுருக்காங்க. அடுத்து சடலத்த எங்க மறைச்சு வைக்குறதுன்னு தெரியாம ரெண்டு பேரும் முழிச்சுட்டு இருந்துருக்காங்க. அப்ப தான் அவங்களுக்கு ஒரு ஐடியா தோனிருக்கு. அவங்க வீட்டு பக்கத்தல டெல்லி - மும்பை விரைவுச் சாலை பணி நடந்துட்டு இருந்துருக்கு. அதுக்காக பல இடங்கள்ல குழிகள் தோண்டப்பட்டு கிடந்துருக்கு. இதனால சிறுவனோட சடலத்த அதுல போட்டு புதைச்சுறலாம்ன்னு நினைச்ச அனில் நைட்டோட நைட்டா சடலத்த, ஒரு கோணிப் பையில போட்டு பணி நடந்துட்டு இருந்த இடத்துக்கு போய்ருக்காங்க. அடுத்து சடலத்த அந்த குழிக்குள்ள போட்டு புதைச்சு, அடையாளம் தெரியாம இருக்க அதுமேல மணல், ஜல்லிய போட்டு மூடி, தார் வச்சு பூசிருக்காங்க. அடுத்து ரெண்டு பேரும் ஒன்னும் தெரியாத மாதிரி இருந்துருக்காங்க. ஆனா, கிட்டதட்ட 6 வருஷம் கழிச்சு மதுபோதையில் இருந்த சித்தப்பா அனிலால எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் அவரையும் அவரோட மனைவியவும் அரெஸ்ட் பண்ண போலீஸ் அவங்கள சிறையில அடைச்சுட்டாங்க.

Related Link
துணை நடிகை தந்தை கொடூரம், பகீர் பின்னணி

துணை நடிகை தந்தை கொடூரம், பகீர் பின்னணி

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

2
16 hrs 7 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved