Also Watch
Read this
By: Web Team

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற அல்காரஸ், இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
பாரீசில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று ஒன்றில் இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி, ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் உடன் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை லோரென்சோ முசெட்டி கைப்பற்றிய நிலையில், 2வது மற்றும் 3வது செட்டை அல்காரஸ் கைப்பற்றினார்.
தொடர்ந்து 4வது செட்டில் 2க்கு பூஜ்ஜியம் என என அல்காரஸ் முன்னிலையில் இருந்தபோது லோரென்சோ முசெட்டி காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறியதால் அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved