Also Watch
Read this
By: Web Team

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஆகஸ்ட் 27, 28ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்:
ஒடிசா, மேற்கு வங்காள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 26 முதல் 30ம் தேதி வரை, ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
கோவை, நீலகிரிக்கு எச்சரிக்கை;

நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஆகஸ்ட் 27, 28ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 28ம் தேதி வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி மழை பதிவு நிலவரம்:
கொள்ளிடம் 6 செமீ, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் 5 செமீ
புவனகிரி, அண்ணாமலை நகர் 4 செமீ
மதுரை வடக்கு, மதுரை மாநகரம், தல்லாகுளம், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, கடலூர் மாவட்டம் குப்பநத்தம், விருதாச்சலம், திருச்சி மாவட்டம் நந்தியாறு ஆகிய பகுதிகளில் தலா 3 செமீ
இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved