Also Watch
Read this
By: Web Team

ராஜஸ்தான் மாநிலத்தில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண், தனது 55ஆவது வயதில் 17ஆவது குழந்தையை பெற்றெடுத்து, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த ரேகா கல்பெலியா. இவருக்கு வயது 55. இவரது கணவர் காவ்ரா கல்பெலியா. இவருக்கு நிரந்தர வேலை இன்றி, குப்பைகளை சேகரித்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இந்த தம்பதிக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் பிறந்துள்ளன. ஐந்து குழந்தைகள் உயிரிழந்து விட்டன. 5 குழந்தைகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.
இந்த சூழலில், ரேகா கல்பெலியா மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். இவர் 55ஆவது வயதில் 17ஆவது குழந்தையை பெற்று எடுத்தாள். தாயும் சேயும் நலம்.
இந்த பெண் பிரசவ வலியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, நான்காவது குழந்தை பிரசவத்திற்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே வறுமையில் தவிக்கும் இந்த தம்பதியினர் தனது குழந்தைகளை வளர்ப்பதில் மிகவும் கஷ்டமான சூழலை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு சொந்த வீடு கிடையாது. நிறைய கடன் உள்ளதால், இந்த தம்பதியினர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த தம்பதியரின் மகள் சீலா கல்பெலியா கூறியதாவது:
நாங்கள் அனைவரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறோம். எனது தாய், தந்தை இருவரும் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் எங்களை படிக்க வைக்க இயலவில்லை.
எனது தாய்க்கு இவ்வளவு குழந்தைகள் இருப்பதை கேட்டு பலரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இவ்வாறு அந்தப்பெண் கூறினார்.
இந்த சம்பவம் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved