Also Watch
Read this
By: Web Team

அமெரிக்காவின் நியூ ஆர்க்((New ark)) விமான நிலையத்தில் இந்திய மாணவர் குற்றவாளி போல நடத்தப்பட்டதன் அதிர்ச்சி வீடியோ வெளியாகி மக்களை கோபமடைய செய்திருக்கிறது.
அதிகாரிகளால் தரையில் கிடத்தப்பட்டு, கைவிலங்கிடப்பட்ட மாணவன் சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பிறகு நாடு கடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
விமான நிலையத்தில் நடந்த இந்த மனிதாபிமானமற்ற செயலை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்த என்.ஆர்.ஐ. தொழிலதிபர் ஒருவர்,
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் முறையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved