news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
indian team

ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில், தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான குழுவினர் ஆலோசனை நடத்தி இந்திய அணியை தேர்வு செய்தனர்.

இந்திய அணி விவரம்:

கேப்டன் - சூர்யகுமார் யாதவ்
துணை கேப்டன் - சுப்மன் கில்
அபிஷேக் சர்மா
சஞ்சு சாம்சன்
திலக் வர்மா
ஹர்திக் பாண்டியா
ரிங்கு சிங்
ஷிவம் துபே
அக்சர் படேல்
வருண் சக்ரவர்த்தி
குல்தீப் யாதவ்
ஜஸ்பிரித் பும்ரா
அர்ஷ்தீப் சிங்
ஹர்ஷித் ராணா
ஜிதேஷ் சர்மா

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட எட்டு அணிகள் பங்கேற்கும் 17ஆவது ஆசிய கிரிக்கெட் போட்டி (20 ஓவர்கள்) அடுத்த மாதம் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகமான துபாய், அபுதாபியில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஏ பிரிவு - இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம்

பி பிரிவு - ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங்

ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் ஒரு முறை விளையாட வேண்டும். லீக் முடிவில், டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும்.

இந்த போட்டிகளில், இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தை செப்டம்பர் 10ஆம் தேதி துபாயில் எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான் அணி உடன் செப்டம்பர் 14ஆம் தேதி துபாயிலும், ஓமன் அணி உடன் செப்டம்பர் 19ஆம் தேதி அபுதாபியிலும் மோதுகிறது. இறுதிப்போட்டி செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
2 hrs 25 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved