Also Watch
Read this
By: Web Team

தென்கொரியாவில் கனமழைக்கு 17 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், அந்நாட்டில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தெற்கு சுங்க்சோங் மாகாணம் குவாங்ஜூ நகரம், மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கேப்யோங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மற்றும் நிவாரண முகாம்கள் மூழ்க, வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதில், 2 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் மாயமாகினர். மழை தொடங்கியதிலிருந்து இதுவரை 11 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved