Also Watch
Read this
தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக செயலாற்றிய 600 காவலர்களுக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கி கெளரவப்படுத்திய நிலையில் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து நடந்தவற்றை அலங்கரிக்கிறது இந்த தொகுப்பு.

பட்டு வேட்டி, பட்டுச்சட்டையில்...
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து பாதுகாப்பு கான்வாய்களுடன் புறப்பட்ட முதலமைச்சர் விஜய், எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்குள் எண்ட்ரி கொடுத்தார். பட்டு வேட்டி, பட்டுச் சட்டை அணிந்திருந்த முதலமைச்சருக்கு தலைமைச் செயலாளர் சாய்குமார் தொடங்கி காவலர்கள் வரை நெஞ்சம் நிறைந்த அன்புடன் பூங்கொத்தை வழங்கி நிகழ்ச்சிக்கு வரவேற்றனர்.

மேடைக்கு சென்ற முதலமைச்சர் விஜய் காவல்துறையினரின் வீரமிக்க அணிவகுப்பு மரியாதையை சல்யூட் அடித்து ஏற்றுக்கொண்டார்.

தமிழ்நாட்டின் பேரிடர் மீட்பு படை, தமிழ்நாடு கடலோர காவல் படை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை, சிறை மற்றும் சீர்த்திருத்தத்துறை, தமிழ்நாடு கமெண்டோ அணி மிடுக்காக வாத்தியங்கள் முழங்க வீர நடைப்போட்டது.

இந்திய குடியரசுத் தலைவர் கொடிக்கு மரியாதை

இந்திய குடியரசு தலைவரின் காவல் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சரின் காவல் பதக்கங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்களை முதலமைச்சர் வழங்கி கெளரவித்தார்.

விஜயின் முகத்தில் புன்முறுவல்
கடலோர காவல் நிலையங்களின் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிக்காக 42 தார் கார்கள், 96 ஹோண்டா யூனிகார்ன் பைக்குகளின் சேவைகளை முதலமைச்சர் விஜய் தனது கரங்களால் பச்சை கொடியை அசைத்து தொடக்கி வைத்தார்.

வீர மோப்ப நாய்கள் கம்பீரமாக அணிவகுத்து வந்து தரையில் தலையை தாழ்த்தி முதலமைச்சர் விஜய்க்கு மரியாதை செலுத்தின.

பின்னர் மோப்பநாய் ராக்கி முதலமைச்சருக்கு பூங்கொத்தை வழங்கி தனித்துவமான வரவேற்பை அளித்தது. அந்நாய்க்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய முதல்வர் விஜயின் முகத்தில் புன்முறுவல் பூத்தது. அதனை தொடர்ந்து மோப்பநாய்களின் சாகச நிகழ்ச்சி நடந்தது.

மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
அதி தீவிர படையினரின் பிணைய கைதிகள் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

பின்னர் துப்பாக்கிகளை சுழற்றி மிடுக்கான வீர தீரமிக்க அணிவகுப்பை செய்தனர்.

தேசிய கொடியின் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டபடி இருசக்கர வாகனத்தில் பறக்கவிட்ட படி ஸ்டேடியத்தை வடமடித்து பின், சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன.

பின்னர் நினைவை சிறப்பாக்கும் வகையில் காவல்துறையினருடன் முதலமைச்சர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிலையில் நிகழ்ச்சி இனிதே நிறைவை தழுவியது.