news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சீனாவில் பிரதமர் மோடி பயணித்த கார்
tv

Also Watch

tv

Read this

சீனாவில் பிரதமர் மோடி பயணித்த கார்

சிறப்பான அம்சங்கள் கொண்டது

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
car

சீன நாட்டில், பிரதமர் மோடி பயணித்த பிரத்யேக காரின் பாதுகாப்பு சிறப்பு அம்சங்கள், வாய் பிளக்க வைத்துள்ளது. 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு இருந்த 2 நாட்களும் Hongqi L5 Limousine காரை பயன்படுத்தினார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்த சீன அதிபரும் இந்த காரில் தான் பயணம் செய்தார்.

Hongqi என்பது (Hong-chi) ஹொங்-சி என உச்சரிக்கப்படுகிறது. இதற்கு, 'சிவப்பு கொடி' என பொருள்.

இந்த சொகுசு கார், FAW எனும் First Automobile Works என்கிற அரசுக்கு சொந்தமான நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. கடந்த 1958ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பிராண்ட், சீனாவின் தேசிய பெருமையை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

Hongqi L5 Limousine காரின் சிறப்பம்சங்கள் என்னவென்றால்...

இதில், 360 டிகிரி கேமரா, cruise control, சென்சார் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இது 6.0 லிட்டர் V12 என்ஜின், 400 horsepower திறன் கொண்டது

உட்புறம் லெதர் இருக்கை, மர அலங்காரம், பின்புற இருக்கையில் மசாஜ், வெப்பம், குளிர்ச்சி வசதிகளும் உள்ளன.

100 கி.மீ. வேகத்தை 8.5 வினாடிகளில் எட்டும் திறன் உடையது. 5.5 மீட்டர் நீளம், 3 டன் எடை கொண்டது.

இதன் விலை சுமார் 5 மில்லியன் யுவான். இது தான் சீனாவின் மிக விலை உயர்ந்த கார். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6 கோடி ரூபாய்.


Hongqi கார் 1958ல் CA72 எனும் மாடலில் தொடங்கியது. 1980ம் ஆண்டு வரை CA770 மாடல்கள் தயாரிக்கப்பட்டன. பின்னர் Audi, Lincoln போன்ற வெளிநாட்டு கார்களை ஹொங்சி பெயரில் விற்றனர். 2018-ல் FAW நிறுவனம் ஹொங்சியை புதிய வடிவில் அறிமுகப்படுத்தியது.

கடந்த 2024ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் 4.1 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த கார், சீனாவின் தொழில்நுட்ப பெருமையை பிரதிபலிக்கும் ஒரு சின்னமாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் சீன பயணத்தின் போது, உற்று நோக்கப்பட்டது இந்த சொகுசு காரும் தான்...

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

300ஆவது படத்தில் நடிக்கும் நடிகர் யோகிபாபு

4
14 mins agoshare
300ஆவது படத்தில் நடிக்கும் நடிகர் யோகிபாபுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau