news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news தாயை அவமதித்து விட்டனர்; பிரதமர் மோடி வருத்தம்
tv

Also Watch

tv

Read this

தாயை அவமதித்து விட்டனர்; பிரதமர் மோடி வருத்தம்

காங், ராஷ்டிரிய ஜனதா தளம் மீது குற்றச்சாட்டு

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
pm

காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் சேர்ந்து, தனது தாயை அவமதித்து விட்டதாக பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது;

எனது அம்மா தான் எனக்கு உலகம். அம்மா தான் எங்கள் சுயமரியாதை. பாரம்பரியம் நிறைந்த இந்த பீகாரில் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வை நான் நினைத்து கூட பார்க்கவில்லை.

எனது தாயை அவமதித்துவிட்டனர். ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் என் தாயை மட்டுமல்ல, இந்த நாட்டின் தாய்மார்களையும், சகோதரிகளையும் அவமதித்து விட்டனர்.

அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத எனது தாயாரை ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் ஏன் விமர்சனம் செய்தனர்?. உங்களை போன்ற கோடிக்கணக்கான தாய்மார்களுக்கு சேவை செய்ய என்னை விட்டு, என் தாய் பிரிந்து இருந்தார்.

இப்போது என் அம்மா உயிருடன் இல்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

சில காலத்திற்கு முன்பு 100 வயதை நிறைவு செய்த பிறகு அவர் நம் அனைவரையும் விட்டுச் சென்றார்.

என் இதயத்தில் எவ்வளவு வலி இருக்கிறதோ? அந்த வலி பீகார் மக்களிடமும் இருக்கிறது. எனது தாய் குறித்து ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்யும் நிலை ஏற்படும் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க முடியாது.

அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத என் தாயாரை, ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் அவமதித்து உள்ளனர். சகோதரிகளே, தாய்மார்களே உங்கள் முகங்களை என்னால் பார்க்க முடிகிறது.

நீங்கள் உணர்ந்திருக்கும் வலியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. சில தாய்மார்களின் கண்களில் கண்ணீரை என்னால் பார்க்க முடிகிறது. இது மிகவும் வேதனையானது.

என் அம்மா மிகவும் வறுமையில் என்னை வளர்த்தார். அவர் தனக்கென ஒரு புதிய சேலையை கூட வாங்க மாட்டார். எங்கள் குடும்பத்திற்காக ஒவ்வொரு பைசாவையும் சேமிப்பார்.

இவ்வாறு உருக்கத்துடன் பிரதமர் மோடி பேசினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

13
9 hrs 19 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved