news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க போவதில்லை என ரவி மோகன் உறுதி
tv

Also Watch

tv

Read this

விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க போவதில்லை என ரவி மோகன் உறுதி

மூன்று எழுத்து இட்லி நடிகை தான் காரணம்

24

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மனைவி ஆர்த்தி உடன் விவாகரத்து கிடைக்கும் வரை, சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று நடிகர் ரவி மோகன் ஆவேசமாக அறிவித்து உள்ளார்.

சினிமாவில் இருந்து விலகல்
இதுதொடர்பாக, பிரபல நடிகர் ரவிமோகன் கூறி இருப்பதாவது;
எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை, இனிமேல் சினிமாவில் நடிக்கப் போவது இல்லை. மன அமைதி இல்லாத நிலையில், முழுமையாக திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால், என்னுடைய படங்களும் சரியாக வெளியிட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. சிலர் எனக்கு எதிராக திட்டமிட்டு செயல்படுகிறார்கள். யார் எங்கிருந்து தாக்கினாலும் அமைதியாக தாங்கிக் கொள்வேன் என்று நினைக்கிறார்கள்.

என்னை வைத்து விளையாட்டு
நான் மிகவும் அமைதியானவன். எதையும் வெளியில் வந்து பேச மாட்டேன். அதைத் தான் பலரும் பலவீனமாக எடுத்துக் கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக வாயைத் திறக்காமல் இருந்தது தான் என்னுடைய பெரிய தவறு. அதனால் தான் எல்லாரும் என்னை வைத்து தங்களுடைய கேமை, விளையாடி விட்டனர்.

கால் நூற்றாண்டாக...
கடந்த 25 ஆண்டுகளாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய குடும்பத்திற்காகத் தான் உழைத்தேன். சில வருடங்களுக்கு முன்பு நான்கு ஆண்டுகள், என் அண்ணனும், அப்பாவும் எந்த வேலையும் இல்லாமல் இருந்த நேரத்திலும், நான் தான் குடும்பத்தை பார்த்துக் கொண்டேன். ஆனால், இப்போது என்னை பெண்களை மதிக்காதவன் என்று சொல்வது, மிகவும் வேதனை தருகிறது.

பெண்களை மதிப்பவன் நான்
நான் பெண்களை மதிக்கிறவன். என்னுடைய படங்களில்கூட பெண்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்து உள்ளேன். பெண்களை மதிக்க வேண்டும் என்று கூறி, வளர்த்த ஒரு அம்மாவுக்கு பிறந்தவன். ஆனால், பல விஷயங்களை வெளிப்படையாக கூறாமல் இருந்ததால் தான் இப்போது எல்லோரும் என்னை தவறாக நினைக்கின்றனர்.

சும்மா விட மாட்டேன்
எனது குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்று யாராவது நினைத்தால் நான் சும்மா இருக்க மாட்டேன். என் குடும்பம் எனக்காக பல விஷயங்களை தாங்கி நிற்கிறது. எனக்கு எல்லாமே என் குடும்பம்தான். இதற்கு முன்பு இருந்த திருமண வாழ்க்கையில் அவங்க கூட வாழ்ந்த போது நான் பெண்களுக்கு எதிரானவன் என்று அவங்க ஒரு இடத்தில் கூட சொல்லலையே. இப்ப ரெண்டு வருஷம் என்னை இவ்வளவு அசிங்கப்படுத்துறாங்க. இதற்கு முன்பு அவர்கள் எத்தனை பேட்டிகளில் நான் தான் அவரை திட்டுவேன் அவர் கோபமே பட மாட்டாருனு சொல்லி இருக்காங்க. அதற்கான ஆதாரங்கள் எல்லாம் என்கிட்ட இருக்கிறது.

மூன்று எழுத்து இட்லி நடிகை தான் காரணம்
மனைவி உடனான குடும்பப் பிரச்சனைக்கு மொத்தக் காரணமும் ஒரு நடிகை தான். அந்த மூன்று எழுத்து இட்லி நடிகை எனது குடும்பத்தை கெடுத்து விட்டார். என் குழந்தைகளுக்காக வாயை மூடிக்கொண்டு இருந்தேன். என் அப்பா, அம்மா அந்த பெண் வேண்டாம் என காலில் விழுந்து கெஞ்சினார்கள். ஒரு சின்ன அன்பு இருந்திருந்தால் நான் வந்திருப்பேனா? வாழ்க்கையில் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். எனக்கு நடந்தது மிகப்பெரிய அநியாயம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை சுத்தம் செய்துவிட்டு மீண்டும் வருவேன். அதுவரை நான் நடிக்கப் போவதில்லை.

குழந்தைகளை பார்க்க விடுவதில்லை
என்னை அடிமையாக வைத்திருந்தனர். கையை அறுத்துக்கொண்டு என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்தார்கள். மிரட்டி தான் என்னை திருமணம் செய்துகொண்டார். ஒருத்தர் வாழ்க்கையில் விளையாடாதீர்கள். என் பிள்ளையை நான் எப்படி விட்டுவிடுவேன்? அவர்களுக்காகவே நான் வாழ்ந்தேன். ஆனால், இன்று என் குழந்தைகளை பார்க்க விடுவதில்லை. பள்ளிக்கு கூட பாதுகாவலர்களை உடன் அனுப்புகிறார்கள். அந்த வாழ்க்கை வேண்டாம் என தெறித்து ஓடி வந்தேன்.

தோழியை அனுப்பி விட்டீர்கள்
ஒரு பெண் என்னை புரிந்துகொண்டு வந்தார். இப்போது அவரையும் (கெனிஷா) காலி செய்து அனுப்பிவிட்டார்கள். நான் பார்க்காத நடிகைகளா? என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பதுதான். 45 வயதில் அழகான பெண்கள் பின்னால் எப்படி செல்ல முடியும்?
இவ்வாறு நடிகர் ரவிமோகன் கூறி உள்ளார்.

Related Link
கருப்பு பட இயக்குநர் கண்ணீர், வீடியோ வைரல்

கருப்பு பட இயக்குநர் கண்ணீர், வீடியோ வைரல்

       



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

9
13 hrs 4 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau