Also Watch
Read this
By: Web Team

குடியரசு துணை தலைவருக்கான போட்டியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்தியாவின் 14ஆவது துணை ஜனாதிபதியாக, 2022 ஆகஸ்டில் பதவியேற்ற ஜகதீப் தன்கர்(74) தமது உடல்நிலையை காரணம் காட்டி, ஜூலை 21ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, 15ஆவது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க இன்று செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில், மத்தியில் ஆளும் தேஜ கூட்டணியின் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், மஹாராஷ்டிரா மாநில ஆளுனருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி சார்பில், தெலுங்கானாவைச் சேர்ந்தவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சுதர்ஷன் ரெட்டி களமிறக்கப்பட்டார்.
இதற்கான தேர்தல், இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. முதல் நபராக பிரதமர் மோடி தனது ஓட்டை பதிவு செய்தார்.
பிறகு அனைத்து மத்திய அமைச்சர்கள், தேஜ கூட்டணி எம்பிக்கள், சோனியா, ராகுல், பிரியங்கா, கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்களும் தங்களது ஓட்டினை பதிவு செய்தனர். இந்த தேர்தலை பாரதிய ராஷ்ட்ரீய சமிதி, பிஜூ ஜனதா தளம் மற்றும் அகாலிதளம் கட்சிகள் புறக்கணித்தன.

சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி:
ஓட்டுப்பதிவு முடிவடைந்த சிறிது நேரத்தில், ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில், தேஜ கூட்டணி சார்பில் களமிறங்கிய சி.பி.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவாக 452 ஓட்டுகள் பதிவாகின.
துணை ஜனாதிபதியாக தேர்வான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பாருங்கள்; குடியரசு துணைத் தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் | CP.Radhakrishnan