news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news கோபத்தின் உச்சியில் சமந்தாவின் ரசிகர்கள்
tv

Also Watch

tv

Read this

கோபத்தின் உச்சியில் சமந்தாவின் ரசிகர்கள்

என்ன நடந்தது?

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
samantha

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும், நடிகருமான நாக சைதன்யா அண்மையில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி, சமந்தா ரசிகர்களை ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது.

டோலிவுட், கோலிவுட் என தென்னிந்திய சினிமாவில் இப்போதும் கலக்கி வருபவர் நாகார்ஜுனா. இவரது மூத்த மகனும், நடிகருமான நாக சைதன்யா, தமிழில் டாப் ஹீரோயினாக திகழ்ந்து வரும் சமந்தாவை கடந்த 2017ஆம் ஆண்டு, காதலித்து திருமணம் செய்தார். சினிமா வட்டாரத்திலேயே மிகவும் Cute ஆன Couple என பெயரும் பெற்றனர்.
திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்து வந்தார். அதற்கு நாக சைதன்யாவும் சப்போர்ட்டாகத் தான் இருந்தார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை இரண்டு பேருக்கும் நடுவே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, இறுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. இப்போதும் கூட அவர்கள் விவாகரத்து செய்து கொண்டதற்கு பலரும் பல கதைகளை சொல்லி வருகிறார்கள்.
சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. முதல் திருமண முறிவால் மன உளைச்சலில் இருந்த தனது மகனின் வாழ்க்கையை சரி செய்ய இந்த புதிய காதல் உதவும் என நம்பிய நாகார்ஜுனா, உடனடியாக திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார். அதன்படி கடந்த 2024ஆம் ஆண்டு நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. ஆனால், இதற்கு சமந்தாவின் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை வைத்தனர்.

இந்நிலையில் தான், நாக சைதன்யா தனது மனைவி சோபிதா குறித்து பேசியது சமந்தா ரசிகர்களை ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “எனது மனைவி சோபிதா துலிபாலா இல்லாமல் என்னால் இருக்க முடியாது. சோபிதாவுக்கும் எனக்குமான காதல் இன்ஸ்டாகிராமில்தான் தொடங்கியது. எனது இன்ஸ்டா பதிவு ஒன்றுக்கு அவர் பதிலளித்திருந்தார். அப்போதிருந்து நாங்கள் பேச ஆரம்பித்துக் கொண்டோம். அது பின் நாட்களில் காதலாக மாறியது" என்றார்.
இதில் மிகவும் கோபமடைந்துள்ள சமந்தா ஃபேன்ஸ், “இதே போன்று தான் சமந்தாவை திருமணம் செய்திருந்த போதும் ஏகப்பட்ட விஷயங்களை அவர் பேசினார். ஆனால் பாதியிலேயே வெளியேறி விட்டார். அவரால் தான் சமந்தாவின் கரியரே போய்விட்டது" என்று கமெண்ட் செய்து, தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.


இதற்கிடையே சமந்தா 2ஆவது திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆனால் அவரும் இயக்குநர் ராஜுவும் டேட்டிங் செய்து வருவதாக சில தகவல்கள் அவ்வப்போது பரவி கொண்டு தான் இருக்கிறது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்றுதான் தெரியவில்லை.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
4 hrs 45 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved