Also Watch
Read this
By: Manigandan Raja

நடிகை ஜான்வி கபூரின் பிறந்த நாளில், "பெத்தி" படக்குழு வெளியிட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது.

ராம் சரண் உடன் ஜான்வி கபூர்
நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள ’பெத்தி’ திரைப்படம், அடுத்த மாதம் ஏப்ரல் 30ஆம் தேதி அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரபல நடிகை ஸ்ரீதேவி - போனிகபூருக்கு மகளாக பிறந்த ஜான்வி கபூர் 2018ஆம் ஆண்டு, ‘தடாக்’ எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வரும் இவர், கடைசியாக 2025ஆம் ஆண்டு, இரண்டு பாலிவுட் படங்களில் நடித்திருந்தார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில்...
தற்போது, தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ’பெத்தி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற, ’சிக்கிரி’ பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

பிறந்த நாள் வாழ்த்து
இந்த நிலையில், நடிகை ஜான்விகபூரின் பிறந்த நாளான இன்று மார்ச் 6ஆம் தேதி, ’ஆச்சியம்மா’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ’பெத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வீடியோவை இயக்குநர், சமூக வலை தளத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved