news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வானிலையில் திடீர் மாற்றம், எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

வானிலையில் திடீர் மாற்றம், எச்சரிக்கை

வெப்பம் அதிகரிக்கும் என கணிப்பு

15

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக, சென்னை மண்டல வானிலை மையம் கூறி இருப்பதாவது;
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அவ்வப்போது ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 16
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 17 முதல் 19 வரை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் வரை உயரக்கூடும்.

ஜூலை 15ஆம் தேதி வரை
அதிக வெப்ப நிலையும், அதிக ஈரப் பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்...
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும்.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Link

"நலம் TN" டிஜிட்டல் தளம் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

DVAC இயக்குநர் பதவி பறிப்பு, ஏடிஜிபி அருண் மாற்றத்தின் பகீர் பின்னணி

6
14 mins agoshare
தவெக தலைமை அதிருப்தி?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau