Also Watch
Read this
By: Web Team

அசாம் மாநில முதல்வரின் சிறப்பு விஜிலென்ஸ் பிரிவு அதிகாரி நுபுர் போரா வீட்டில் சோதனை நடத்தி, ஒரு கோடி ரூபாய் மற்றும் தங்க நகைகளை பறிமுதல் செய்து, அப்பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
பாஜக ஆளும் அசாமில், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சரின் சிறப்பு விஜிலென்ஸ் பிரிவு அதிகாரி நுபுர் போராவின் வீட்டில் சோதனை நடைபெற்றது. இவர், அசாம் சிவில் சர்வீசஸ் (ஏசிஎஸ்) அதிகாரியாக பணியாற்றுபவர்.
இவரது வீட்டில் நடந்த திடீர் சோதனையில் சுமார் 90 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டன. மீட்கப்பட்ட மொத்த மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பெண் அதிகாரியான நுபுர் போரா, கடந்த ஆறு மாதங்களாக கண்காணிக்கப்பட்டு வந்தார். இதன் பின்னணியில், அவர் தனது பதவிக் காலத்தில் சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்ததாக கூறப்படுகிறது.
பர்பேட்டா மாவட்டத்தில் நுபுர் போரா பணியாற்றிய போது, சந்தேகத்திற்குரிய ஊடுருவல்காரர்களின் பெயரில் அரசாங்க நிலங்களை சட்டவிரோதமாகப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இப்பெண் அதிகாரிக்கு உடந்தையாக இருந்த அலுவலர்கள் மீதும் நடவடிக்கை துவங்கி உள்ளது.