Also Watch
Read this
By: Web Team

கேரள மாநிலம், வயநாடு சுல்தான் பத்தேரி, சிரால் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
வயநாடு கிராம சுற்று வட்டார பகுதிகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க திட்டமிட்டனர்.
இதனை தொடர்ந்து, சிரால் பகுதியில் வனத்துறையை ஒட்டிய இடங்களில் சிறுத்தைக்கு கூண்டு வைக்கப்பட்டது.

நேற்று வனத்துறையால் அமைக்கப்பட்ட கூண்டில் இன்று காலை சிறுத்தை சிக்கியது. தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved