news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம்
tv

Also Watch

tv

Read this

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம்

ஒரு சவரன் ரூ.87,120

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold

ஆபரணத் தங்கத்தின் விலை, வரலாறு காணாத அளவுக்கு ரூ.87 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக, தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 23ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.85 ஆயிரத்தை கடந்து, புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின் 2 நாட்களாக குறைந்த தங்கத்தின் விலை, மீண்டும் விலை உயர்ந்தது.

இதன்படி 27ஆம் தேதி, தங்கத்தின் விலை மீண்டும் ரூ.85 ஆயிரத்தை தொட்டது. அதன்பின்னர் நேற்று முன் தினம் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து ரூ.86 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.
தொடர்ந்து, நேற்றும் உயர்வு கண்ட தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.10,860-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.86,880க்கும் விற்பனையானது. இன்றும் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.10,890க்கும், ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.87,120க்கும் விற்பனையாகிறது.


ஒரு கிராம் வெள்ளி ரூ.161க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1.61 லட்சத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 16042026

0
0 min agoshare
இன்றைய ராசிபலன்கள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved