news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பப்ஜியால் வந்த வினை, சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை
tv

Also Watch

tv

Read this

பப்ஜியால் வந்த வினை, சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை

லாகூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
pubg

பப்ஜி விளையாட்டின் மீது உள்ள உச்சகட்ட ஆர்வத்தால் பெற்ற தாயையும், 2 சகோதரி, சகோதரனையும் கொலை செய்த சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஜைன் அலி, 2022ஆம் ஆண்டில் இருந்து பப்ஜி விளையாடி வந்துள்ளார். பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான ஜைன் அலி, அவ்வப்போது கோபமாக மாறி வந்துள்ளார். இந்நிலையில், நீண்ட நேரமாக பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த ஜைன் அலி, டார்க்கெட்டை அடையவில்லை என கூறப்படுகிறது.
அந்தநேரம் பார்த்து ரொம்ப நேரமாக பப்ஜி விளையாடுவதை கவனித்த தாய், ஜைன் அலியை கண்டித்துள்ளார். இதனால் கோபத்தின் உச்ச கட்டத்துக்கே சென்ற ஜைன் அலி, வீட்டில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து தூங்கி கொண்டிருந்த தன் தாய், அண்ணன் மற்றும் சகோதரிகளை சுட்டு கொன்றுள்ளார். தகவலறிந்த போலீசார் சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், பப்ஜி விளையாட்டின் மீதான ஆர்வத்தால் தன் குடும்பத்தையே ஜைன் அலி சுட்டு கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கை விசாரித்த லாகூர் நீதிமன்றம் 17 வயதான ஜைன் அலிக்கு 4 ஆயுள் தண்டனை, அதாவது 100 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாக்யராஜ் எழுதிய கடிதம் - கேட்கும் போதே இதயம் வெடிக்குது

0
1 min agoshare
Bhakyarajbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau