news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news “மத்திய கிழக்கில் இந்தியர்களை தவிக்க விடமாட்டோம்”
tv

Also Watch

tv

Read this

“மத்திய கிழக்கில் இந்தியர்களை தவிக்க விடமாட்டோம்”

பிரதமர் மோடி உறுதி

31

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
modi in keralam

மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியில், அங்குள்ள இந்தியர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கேரளத்தில் பிரதமர் நரேந்திர மோடி
கேரள மாநிலம் கொச்சியில், அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது;
போர் குறித்த நிலையை அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேற்கு ஆசியா முழுவதும் வாழும் மற்றும் பணிபுரியும் இந்தியர்களுக்கு உதவுவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைத்து வருகிறோம். தற்போதைய பதற்றங்களின்போது வளைகுடா நாடுகள், அங்கு பணிபுரியும் இந்தியர்கள் மீது மிகுந்த அக்கறை காட்டுகின்றன. அதற்காக நான் அவர்களுக்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன். தற்போதைய மேற்கு ஆசிய நெருக்கடியில் அரசியல் விளையாடுகிறது. வெளிநாடுகளில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை அரசியலாக்கக் கூடாது.

கேரளா, கேரளம் ஆனது
கேரளாவை கேரளம் என்று மாற்ற வேண்டும் என்பது உங்கள் விருப்பம். அதனை பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி அரசு நனவாக்கி உள்ளது. இந்த அழகான இடத்திற்கு இப்போது தான் சரியான பெயர் கிடைத்து உள்ளது. அனைவரின் முயற்சிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கேரளம் என்ற பெயரை மத்திய அரசு மாற்றி இருப்பது, மலையாளி சகோதர, சகோதரிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணம்.

மீனவர்களுக்கு பாராட்டு
கேரள வெள்ளத்தின் போது, மீனவர் சமூகத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டுக்கு உரியது. தங்கள் உயிரை பணயம் வைத்தும் பல உயிர்களை காப்பாற்றிய அவர்களின் துணிச்சலை உலகம் கண்டது. நாடு சவால்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் மீனவர் சமூகத்தினரின் துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. எங்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீனவர்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

கேரளத்தின் வளர்ச்சி
தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், மீனவர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஒரே இணைய தளத்தில் பதிவு செய்யலாம். அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுவதும் அவர்களுக்கு எளிதாகிவிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மீனவர்கள் நலனுக்காக திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ், கேரளத்திற்கு 1400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, மீன்வளத் துறை வேகமாக முன்னேறி வருகிறது. கேரளத்தின் ஒவ்வொரு குடும்பமும் செழிப்பைப் பெறுவதே எங்கள் நோக்கம். இது வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கு அடித்தளமாகவும் மாறும். வளர்ச்சி அடைந்த கேரளத்தை உருவாக்க வழிவகுக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

Related Link

"சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சரிசெய்க"

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விராட் கோலியின் கால்களை தொட்ட மாணவர்

0
5 mins agoshare
Virat kholi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved