Also Watch
Read this
By: Web Team

சென்னையில், தவெக தலைவர் விஜய் எப்போது பிரச்சாரம் செய்ய உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலை ஒட்டி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 13ஆம் தேதி தொடங்கிய விஜய்யின் சுற்றுப்பயணத்தில் திருச்சி, நாகை மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை முடித்துள்ளார்.
அடுத்ததாக, நாளை நாமக்கல், கரூர் மாவட்டங்களுக்கு செல்லும் விஜய், பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த சூழலில் டிசம்பர் மாதத்துடன் முடிய உள்ள விஜய்யின் சுற்றுப்பயணம் பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாரத்தில், சனிக்கிழமை மட்டுமே பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் விஜய், நேரமின்மையால் 2 மாவட்டங்களுக்கு பதிலாக 3 மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு சந்திப்பின் போதும், கால தாமதம், கூட்ட நெரிசல், தொண்டர்களின் ஆரவாரம் என, விஜய் அரசியல் மீதான விமர்சனத்தை முன் வைப்பதால் அவர்களுக்கு தவெகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில், சென்னையில் விஜய்யின் பிரச்சாரம் எப்போது? என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. அக்டோபர் 21ஆம் தேதி சென்னை மக்களை, விஜய் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு பிரச்சாரத்தின் போதும் திமுகவை விமர்சித்து வரும் விஜய்க்கு, திமுக தலைமையும், அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
சென்னையில் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.