Also Watch
Read this
By: Web Team

பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு கர்நாடக காங்கிரஸ் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.
மேலும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் அப்பாவி மக்கள் உயிர் பறிபோனதாக குற்றச்சாட்டி உள்ள மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, அரசியல் ஆதாயம் தேட முயன்றதால் ஏற்பட்ட சோகம் எனவும் விமர்சனம் செய்துள்ளார்.
அதோடு, கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு பாதுகாப்பில் ஏற்பட்ட ஓட்டையும், ஆம்புலன்ஸ் குறைபாடும்தான் காரணம் என குற்றச்சாட்டி உள்ள அவர், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved