Also Watch
Read this
By: Web Team

மாநில உரிமையை காப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி கடுமையாக சாடியுள்ளார்.
ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 2 ஆயிரத்து 151 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்காத நிலையில், கடந்த ஓராண்டாக திமுக அரசு உறங்கி கொண்டு கோட்டைவிட்டதாக அன்புமணி விமர்சித்துள்ளார்.
நிதி பெறுவது தொடர்பாக மாநில அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், ஜூலை 13 ஆம் தேதி வரை உச்சநீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் அதற்கு முன்பாகவே மனுவை விசாரிக்க வாய்ப்பில்லை என்றும் இது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved