Also Watch
Read this
By: Web Team

செங்டு ஓபன் டென்னிஸ் தொடரில் சிலி நாட்டின் அலெஜான்ட்ரோ டாபிலோ சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். சீனாவின் பீஜிங் நகரத்தில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இத்தாலி நாட்டின் லோரென்சோ முசெட்டி, சிலி நாட்டின் அலெஜான்ட்ரோ டாபிலோ உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட அலெஜான்ட்ரோ டாபிலோ 6க்கு 3, 2க்கு 6, 7க்கு 6 என்ற செட் கணக்கில் லோரென்சோ முசெட்டியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.