Also Watch
Read this
By: Web Team

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, ஆஸ்திரேலியாவின் டரியா கசட்கினா உடன் மோதினார். சிறப்பாக ஆடிய கசட்கினா 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீராங்கனையான பவுலா படோசா தொடரில் இருந்து வெளியேறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved