Also Watch
Read this
By: Web Team

இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு சேவி ஹெர்னாண்டஸ்((XAVI HERNANDEZ)) ஒருபோதும் விண்ணப்பிக்க வில்லை என AIFF மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பார்சிலோனா ஜாம்பவான் சேவி ஹெர்னாண்டஸ் விண்ணப்பித்ததாகவும், நிதி சிக்கல்கள் காரணமாக அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் AIFF தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஸ்பானிஷ் மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் இதனை மறுத்துள்ளன. சேவிக்கும் - இந்திய கூட்டமைப்புக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மேலாளர் தேடுதலின் போது, AIFF வேண்டுமென்றே அவர் பெயரைப் பயன்படுத்தி அப்பதவியின் புகழைப் பெருக்கவே இதுபோன்று செய்வதாக சொல்லப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved