Also Watch
Read this
By: Manigandan Raja

சாம்பியன் அணிக்கு FIFA வழங்கும் தங்க மோதிர பரிசு
FIFA கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு, உலகக் கோப்பை மற்றும் தங்கப் பதக்கங்களுடன், முதல் முறையாக பிரத்யேக சாம்பியன்ஷிப் ரிங் வழங்கப்பட உள்ளது. மொத்தம் 2,026 சிறப்பு மோதிரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதில் 30 மோதிரங்கள் சாம்பியன் அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,996 மோதிரங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களுக்காக விற்பனை செய்யப்பட உள்ளன.
முதன்முறையாக முன்னேறிய இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதி போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தினார்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதன்முறையாக முன்னேறி அசத்தியுள்ளார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் சீனாவின் சின் யுபியை ((Chen Yufei)) எதிர்த்து விளையாடிய சிந்து, 21க்கு19, 15க்கு 10 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்று அசத்தினார். இதையடுத்து வரும் 19-ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் ஜப்பான் அல்லது இந்தோனேசியா நாட்டு வீராங்கனையை எதிர்த்து அவர் விளையாட உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved