Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனம் முதல் மிக கனமழையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நெல்லை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டத்தில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.