Also Watch
Read this
By: Web Team

வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளைஞர்களின் புரட்சியால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி
ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்த நிலையில், தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியில் உள்ளது. ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு அந்நாட்டில் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved