Also Watch
Read this
By: Web Team

கோவிட்-19 தரவுகளைத் திருடியதற்காக அமெரிக்காவால் தேடப்பட்ட சீன ஹேக்கர் இத்தாலியில் கைது செய்யப்பட்டார்.
2020 ஆம் ஆண்டு கோவிட் தொற்று உச்சத்தில் இருந்தபோது சீன உளவுத்துறை சார்பாக அமெரிக்காவிலிருந்து COVID-19 தடுப்பூசி ரகசியங்களைத் திருடிய
அரசு ஆதரவு ஹேக்கிங் குழுவின் ஒரு பகுதியாக சூ ஜெவெய் ((Xu Zewei )) செயல்பட்டதாக அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்டார்.
அவருக்கு சர்வதேச பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த 3 ம் தேதி தேதி மிலனின் மால்பென்சா ((Milan's Malpensa airport ))விமான நிலையத்தில் சூ ஜெவெய் கைது செய்யப்பட்டார்.
அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கான செயல்முறையை அமெரிக்க நீதித்துறை தொடங்கியதாக இத்தாலி அதிகாரிகள் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved