Also Watch
Read this
By: Manigandan Raja

754 பேர் உயிரிழப்பு - 2,011 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு
மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டில், எபோலா வைரஸ் பாதிப்பால் இதுவரை 754 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 2 ஆயிரத்து 11 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இடுரி, வடக்கு கிவு, தெற்கு கிவு ஆகிய மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஃபுஜைரா துறைமுகத்தை மேம்படுத்த தொடங்கிய அமீரக அரசு

ஈரான் அச்சுறுத்தல் காரணமாக ஹோர்முஸ் நீரிணைப் பாதையை பயன்படுத்துவதை தவிர்க்க, இந்தியப் பெருங்கடல் அருகே அமைந்துள்ள ஃபுஜைரா((Fujairah)) துறைமுகத்தை மேம்படுத்தும் பணிகளை ஐக்கிய அரபு அமீரக அரசு வேகப்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய துறைமுகமாக ஜெபல் அலி((Jebel Ali))இருந்தாலும், சர்வதேச அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஒரு துறைமுகத்தை மட்டும் சார்ந்திருப்பதை தவிர்க்க இந்த முயற்சியை அமீரக அரசு மேற்கொள்கிறது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய கப்பல் எரிபொருள் நிரப்பும் மையமாகவும், முக்கியமான எரிசக்தித் துறைமுகமாகவும் ஃபுஜைரா துறைமுகம் விளங்குவது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved