Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த அதிபர் டிரம்ப்
அமெரிக்க ராணுவம் அடுத்த மூன்று நாட்களுக்கு ஈரானை கடுமையாக தாக்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஈரானை பலவீனப்படுத்துவதே தாக்குதலில் நோக்கம் என டிரம்ப் தெரிவித்தார்.
ஈரான் பேச்சுவார்த்தைக்கு மறுத்தால் வரும் நாட்களில் ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றும், தொடர்ந்து பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
பேட்ரியாட் ஏவுகணைகளை உற்பத்தி செய்ய உக்ரைன் திட்டம்
2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணைகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். உக்ரைனுக்கு தேவையான உரிமத்தை வழங்க அமெரிக்க ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏவுகணைகளை உற்பத்தி முயற்சி ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும், உக்ரைன் பல தடைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் கூறப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன்-ரஷ்யா போர் நடைபெற்று வரும் நிலையில், போரை முடிவுக்கு வர வேண்டுமென பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
காஸா மீது தீவிரமடையும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்கள்

காஸா மீதான இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 12-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவின் மத்திய பகுதியில் உள்ள அல்-அக்ஸா மருத்துவமனையின் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் ஜபாலியா மற்றும் கான் யூனிஸ் முகாம் பகுதியில் நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.