Also Watch
Read this
தமிழ்நாட்டில், 15 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நான்கு மாவட்டங்களில் வெப்பம் தகிக்கும் என்றும் கணித்து உள்ளது.

தகிக்கும் வெப்பம்...
இதுதொடர்பாக, சென்னை மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது;
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பை பொறுத்தவரை, திருவள்ளூர், மதுரை, கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசியது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
வெப்ப நிலை நிலவரம்
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் இயல்பில் இருந்து 2-6° செல்சியஸ் வரை உயர்ந்து இருந்தது.

அதிகபட்ச வெப்பநிலை:
வேலூர் - 41.6° செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை:
சமவெளிப்பகுதிகளில்
கோயம்புத்தூர் விமான நிலையம் - 22.6° செல்சியஸ்
மலைப்பகுதிகளில் உதகமண்டலம் - 10.8° செல்சியஸ்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக...
ஜூலை 16 இன்று
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஜூலை 17
மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்துடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 18, 19ஆம் தேதிகளில்
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 20
தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 21, 22ஆம் தேதிகளில்...
தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.
ஜூலை 20ஆம் தேதி வரை
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
16 மற்றும் 17ஆம் தேதிகளில், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.

ஜூலை 16
ராணிப்பேட்டை
வேலூர்
திருப்பத்தூர்
தர்மபுரி
கிருஷ்ணகிரி
சேலம்
நாமக்கல்
கரூர்
ஈரோடு
திண்டுக்கல்
மதுரை
விருதுநகர்
தூத்துக்குடி மாவட்டத்தின் சமவெளி பகுதிகள்
திருநெல்வேலி மாவட்டத்தின் சமவெளி பகுதிகள்
தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

ஜூலை 17
கரூர்
ஈரோடு
தூத்துக்குடி
திருநெல்வேலி மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்...
இன்று 16ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும்.
நாளை 17ஆம் தேதி, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மதியம், மாலை நேரங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும்.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved