Also Watch
Read this
By: Web Team

ஈகுவடார் அதிபர் Daniel Noboa சென்ற கார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதுடன் துப்பாக்கிச்சூடும் நடத்தியதால் பதற்றம் நிலவியது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்வதாக அதிபர் டேனியல் நோபோவா அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், டீசல் மானியத்தை திரும்ப வழங்க கோரி அங்கு நாடு தழுவிய அளவில் போராட்டம் நடந்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved