Also Watch
Read this
By: Web Team

காசாவுக்கு பாராசூட் மூலம் நிவாரண பொருட்களை அனுப்ப இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி, பட்டினியால் வாடும் பாலஸ்தீன மக்களுக்கு சற்று ஆறுதலை தந்திருக்கிறது.
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்கள், உணவு கிடைக்காமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.குறிப்பாக, பட்டினியால் இறப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடி வரும் நிலையில், மனிதாபிமான உதவிகளையும் தடை செய்து இஸ்ரேல் அரக்கத்தனமாக நடந்துகொண்டது.
இதற்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது சர்வதேச நாடுகள் பாராசூட் மூலம் காசாவுக்கு நிவாரண பொருட்களை அனுப்ப அனுமதித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved