Also Watch
Read this
By: Manigandan Raja

பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுப்பட விருப்பக் கடிதம் :
இந்தியாவும் ஸ்லோவாக்கியாவும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க "விருப்பக் கடிதத்தில்" ((Letter of Intent)) கையெழுத்திட்டுள்ளன. அரசு முறை பயணமாக ஸ்லோவாக்கியா சென்றுள்ள பிரதமர் மோடி மற்றும் ஸ்லோவாக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பிற்குப் பின்னர் பிரதமர் இதனை உறுதிப்படுத்தினார்.
இந்த முக்கிய ஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகளின் பாதுகாப்புத் தொழில்துறைக்கு இடையே கூட்டு மேம்பாடு, கூட்டு உற்பத்தி மற்றும் ஒத்துழைப்பு ஆகியன புதிய உச்சத்தை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சாலையில் விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம் :

பாகிஸ்தானில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படை பயிற்சி விமானம், வாகனங்கள் சென்று கொண்டிருந்த சாலையில் விழுந்து நொறுங்கி, வெடித்து சிதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் Mardan பகுதியில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த விமானிகள் இருவரும் உயிரிழந்தனர். விமானம் விழுந்து நொறுங்கிய சாலையில் சென்ற பொதுமக்கள் இருவரும் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாகச முயற்சி சோகத்தில் முடிந்த பரிதாபம் :
ஏமனின் ஸ்பைடர் மேன் அன்று அறியப்படும் சமூக வலைதள பிரபலம், தனது சாகச முயற்சியின் போது எரிமலை பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் அந்தர் அல் அப்சி((Antar Al Absi)) என்று அழைக்கப்படும் 30 வயது இன்ஃப்ளூயன்சரான அல் காகா பின் அந்தர்((Al Qa'qa' bin Antar)), தெற்கு ஏமனின் அல் தாலே ((Al Dhale)) மாகாணத்தில் உள்ள Haradhat Damt எரிமலைப் பள்ளத்தின் செங்குத்தான பாறையில் ஏறி சாகசத்தில் ஈடுபட்டார்.
எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பாறையில் ஏறிய அவர், ஒரு கட்டத்தில் பிடி நழுவியதால் 120 மீட்டர் ஆழ எரிமலை பள்ளத்தில் தவறி விழுந்தார்.