news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் மீது தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் மீது தாக்குதல்

ஜெய்ப்பூர், ராஜஸ்தான்

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் மீது தாக்குதல் :

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அக்கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க சென்ற அபிஜித்தை, அவரது ஆதரவாளர்கள் தோளில் வைத்து தூக்கிச் சென்றனர். அப்போது கூட்டத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் சிலர், அபிஜித்தை பலமுறை கன்னத்தில் அறைந்ததோடு, அவர் கழுத்தில் அணிந்திருந்த துண்டை பிடித்து இழுத்து கீழே தள்ள முயன்றனர்.

ராஜஸ்தான் மற்றும் தலைநகர் டெல்லியில் புழுதி புயல் :

ராஜஸ்தான் மாநிலம் Churu மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திடீரென புழுதி புயல் வீசியதால், மக்கள் பீதியடைந்து வீடுகளுக்குள் முடங்கினர். கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், திங்கட்கிழமை மதியம் 2 மணியளவில், திடீரென காலநிலை மாறி சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் அடர்த்தியான புழுதி புயல் வீசியது. அதனை தொடர்ந்து பலத்த மழையும் பெய்ததால், புழுதி புயலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவியது. இதே போல் பிகானேர் பகுதியிலும் புழுதி புயல் வீசியது.

தலைநகர் டெல்லியிலும் புழுதி புயல் வீசியதோடு, பல்வேறு பகுதிகளிலும் அதிகபட்சமாக மணிக்கு 92 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசியதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
8 hrs 36 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau