news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு

எழும்பூர், சென்னை

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அன்பில் மகேஷ்

சினிமா கனவுகளோடு வரும் பெண்களை பெரிய நடிகர்களுடன் நடிக்க வைப்பதாக கூறி பலரின் வாழ்வை 'ஜெ' என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கொண்ட முதலமைச்சரின் அடியாள் நபரால் பாதிக்கப்பட்டுள்ளதாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி திமுக சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் புத்தெழுச்சி நாள் கொண்டாடப்பட்டது. சென்னை எழும்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, புத்தாடைகள், பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, உபகரணங்கள், திருநங்கைகளுக்கு நல உதவி புத்தாடைகள், ரத்ததானம் அளித்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், நாங்கள் செய்த நல்லதை மறைக்க, பொய்யென்று சொல்ல ஒரு மாபியா டீம் சமூக வலைத்தளங்களில் செயல்பட்டு வருவதாகவும், பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் அறிவுரை சொல்ல வேண்டும் என்றும், சின்னப்பிள்ளை சொல்லி வாக்களித்தேன் என்று கூறிய 30 சதவீத பேர் ஏன் வாக்களித்தோம் என்று வருத்தப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திராவிட முன்னேற்ற கழகத்தை துடைத்து எறிந்து விடுவோம் என ஒரு அமைச்சர் கூறுகிறார். துடைக்கும் துடைப்பமாக வேண்டுமானால் அவர்கள் இருக்கலாம், ஆனால் துடைத்தால் பறக்கும் தூசி திமுக இல்லை என்றும், பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது வருத்தமளிக்கிறது. தவெக இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் பல இடங்களில் பெண்கள் சீரழிக்கப்படுகிறார்கள் என்றும், முதலமைச்சர் உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்றார். என்றார்.

திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் பேசுகையில், சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான பெரிய அளவில் குற்றங்கள் நடைபெறுகிறது. முதல்வருக்கு ஒரு அடியாள் உள்ளார்.

அவர் சமூக தளங்களில் பெண்கள் குறித்து அவதூறு பரப்புகிறார். அவர் யார் என்று உங்களுக்கே தெரியும். சினிமா கனவுகளோடு வரும் பெண்களை பெரிய நடிகர்களுடன் நடிக்க வைப்பதாக கூறி பலரின் வாழ்வை கெடுத்துள்ளார் என்றார்.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பேசுகையில், திமுக என்பது நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் இல்லை. பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே திமுக உருவாகி தமிழ்நாட்டில் ஒரு ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.

தமிழக வெற்றிக்கழகத்தினர் பேச பேச திமுக இன்னும் வளர்ந்து கொண்டே தான் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் கல்வி ஒன்றே அழியாத சொத்து என்று கல்விக்கு பல்வேறு நலத்திட்டங்களை நம்முடைய தலைவர் தீட்டினார்.

ஆட்சிக்கு வந்தவர்கள் என்ன மாதிரி அரசாங்கத்தை நடத்துகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. ஆறு மாதம் கேள்வி கேட்க கூடாது என்கிறார்கள், இந்த ஆறு மாதம் மின்சாரம் இல்லாமல் குடிநீர் இல்லாமல் நாம் இருக்க வேண்டுமா? என்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ், அனைத்து மாநிலங்களிலும் குற்றம் சம்பவங்கள் நடைபெறும், ஆளும் கட்சி அதை எப்படி ஹேண்டில் செய்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம், திமுக ஆட்சியில் இருந்த பொழுது அண்ணா பல்கலைக்கழக சம்பவத்திற்கு எப்படி விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும் தமிழ்நாடு முதலமைச்சர் ஹனிமூன் பீரியட் கேட்கிறார் ஆறு மாதத்திற்கு பிறகு நடவடிக்கை எடுப்பார்.

முதலமைச்சரின் அடியால் அவர் பெயர் சொல்ல விரும்பவில்லை பத்திரிக்கையாளர்கள் கேட்பதால் மிஸ்டர் ஜெ என்ற முதல் எழுத்தை சூசகமாக கூறினார். நிறைய பெண்கள் முதலமைச்சரின் அடியாளாக உள்ள ஜெ என்ற வார்த்தை வரக்கூடிய அந்த நபரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் ஒரு மாபியா நிறுவனம் நடத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களில் பெண்கள் பற்றி அவதூறாக பரப்பி வருகிறார்.

சின்ன கிராமத்திலிருந்து வரக்கூடிய பெண்களிடம் பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பெண்களின் வாழ்க்கையை அழித்துள்ளார். அதில் ஒரு பெண் என்னுடைய பேஷன்ட் அவர்கள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்.

அந்த அடியாள் செய்த துன்புறுத்தலால் அவர் தனது சொந்த ஊருக்கே சென்று விட்டார். இந்த அரசின் ஒரு மாத சாதனையாக நான் எதையும் பார்க்கவில்லை. மாஸ்டர் மகேந்திரன் பொதுமக்களுக்கு மின்சாரத்தை முதலில் கொடுக்கட்டும் பார்க்கலாம். சமூக வலைத்தளங்களில் பெண்களை மரியாதையாக தமிழக வெற்றி கழகத்தினர் பேசினால் நன்றாக இருக்கும் என கூறினார்.

Related Link
இன்றுபோய் நாளை வா, கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் இபிஎஸ்

இன்றுபோய் நாளை வா, கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் இபிஎஸ்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
8 hrs 34 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau