news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பெண் அமைச்சரின் தலையில் கொட்டிய சூடான பாயாசம்
tv

Also Watch

tv

Read this

பெண் அமைச்சரின் தலையில் கொட்டிய சூடான பாயாசம்

கேரளம்

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சூடான பாயாசம்

மகளிர் இலவச பேருந்து பயண திட்ட விழாவில் பரபரப்பு :

கேரளத்தில் பெண் அமைச்சரின் தலையில் சூடான பாயாசம் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் பிந்து கிருஷ்ணா, பேருந்தில் பொதுமக்களுடன் இணைந்து பயணம் செய்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் அமைச்சருக்கு சுடச்சுட பாயாசம் கொடுக்க முயன்றபோது நிலை தடுமாறி, அமைச்சரின் தலையிலும், ஆடையிலும் கொட்டியது.

மரத்தில் கார் மோதியதில் தம்பதி உட்பட 5 பேர் பலி :

மத்திய பிரதேசத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில், 8 வயது மகனுடன் தம்பதி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமியா பகுதியில் இருந்து மத்குளி பகுதியை நோக்கி சென்ற சொகுசு கார், நர்மதாபுரம் மாவட்டத்தில் எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் திருப்பி உள்ளார்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோர மரத்தின் மீது மோதியதில், தம்பதி, அவர்களது 8 வயது மகன் உள்பட 5 பேர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பிரதமர் மோடிக்கு ஸ்லோவாகிய நாட்டின் மிக உயரிய விருது :

பிரதமர் மோடிக்கு ஸ்லோவாகிய நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இது வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளால் பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 33-வது விருதாகும்.

அரசுமுறை பயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு, ஸ்லோவாகியா அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அந்நாட்டு அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி "தி ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ்" விருதை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து, அதிபர் மாளிகையின் விருந்தினர் புத்தகத்திலும் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.

Related Link
நீட் மறு தேர்வு, டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

நீட் மறு தேர்வு, டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
9 hrs 2 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau