Also Watch
Read this
By: Web Team

அமெரிக்காவின் மிச்சிகன் வால்மார்ட்டில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்தனர். மிச்சிகனின் டிராவர்ஸ் நகரில் உள்ள வால்மார்ட்க்குள் நுழைந்த மர்ந நபர் ஒருவர் அங்கு ஷாப்பிங் செய்து கொண்டிருந்தவர்களை கத்தியால் சராமாரியாக குத்தியதில் 11 பேர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான நபர் மிச்சிகனை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ள நிலையில் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள் : பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு..!
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved