Also Watch
Read this
By: Web Team

தெற்கு பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து வெடித்ததில், அதில் பயணித்த 5 பேரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. டயமர்(( Diamer )) மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில், எம்.ஐ.17 ராணுவ ஹெலிகாப்டரை தரையிறக்க முயன்ற போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்ததாக சொல்லப்படுகிறது.
இதில் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு வீரர்கள், இரண்டு பணியாளர்கள் மற்றும் பொறியாளர் என ஐவரும் பலியாகினர். இதையடுத்து விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.