Also Watch
Read this
By: Web Team

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த மங்கோலியா பிரதமர் ஓயுன்-எர்டீன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக தலைநகர் உலான்பாதரில் பல நாட்கள் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன் முடிவு நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பிறகு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த ஓயுன்-எர்டீன், தொற்று நோய்கள், போர்கள் மற்றும் வரிவிதிப்பு உள்ளிட்ட சிரமங்களின் போது நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்வது ஒரு மரியாதை என்றார்.
அடுத்து பிரதமர் நியமிக்கப்படும் வரை அவரே தற்காலிக பிரதமராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved