Also Watch
Read this
By: Web Team

இந்திய கடற்படையின் MH-60R சீஹாக் ஹெலிகாப்டர் படையின் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க அமெரிக்காவுடன் 7 ஆயிரத்து 995 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. எல்லா விதமான வானிலை சூழலிலும் இயங்கக்கூடிய இந்த ஹெலிகாப்டர்களுக்கான உதிரி பாகங்கள், தொழில்நுட்ப பயிற்சி, பராமரிப்பு, பழுது நீக்கம், உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தம் பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், டெல்லியில் கையெழுத்தானது. இது இந்திய கடற்படையின் செயல்திறனை அதிகரிப்பதோடு, இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான படியாகவும் கருதப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved