news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews "பகல் கனவு காண்பதை டிரம்ப் நிறுத்த வேண்டும்"
tv

Also Watch

tv

Read this

"பகல் கனவு காண்பதை டிரம்ப் நிறுத்த வேண்டும்"

டிரம்ப்

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி காட்டம் :

அமெரிக்க அதிபர் டிரம்ப் பகல் கனவு காண்பதை நிறுத்திவிட்டு, யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி காட்டமாக கூறியுள்ளார். ஈரான் உச்ச தலைவரை சந்திக்க விரும்புவதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், இதற்கு பதிலளித்துள்ள அராக்சி, அந்த சந்திப்பிற்கான வாய்ப்பை அடியோடு மறுத்தார்.

"ஐநா தளங்களை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்துகிறது" :

ஐநா தளங்களை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டிய இந்தியா, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு சபையின் ஆண்டறிக்கை மீதான பொது சபையின் விவாதத்தின்போது பாகிஸ்தான் நிரந்தர பிரதிநிதி ஆசிம் இப்திகார் அகமது, காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி, பாதுகாப்பு சபையின் தீர்மானங்களின்படி தீர்க்கப்பட வேண்டும் என்றார்.

இம்ரான் கானுக்கு சிறையில் சட்டரீதியான உரிமைகள் மறுப்பு :

பாகிஸ்தானில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு சட்டரீதியான உரிமைகள் மறுக்கப்படுவதாக, அவரது கட்சித் தலைமை குற்றம் சாட்டியுள்ளது.

கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சியினர், முறையான மருத்துவ வசதிகள் கூட இருவருக்கும் மறுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இம்ரான் கான் 2023 முதலும், அவரது மனைவி 2024 மே முதலும் சிறையில் உள்ளனர்.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர் மீது உக்ரைன் தாக்குதல் :

போர் நிறுத்த கோரிக்கையை புதின் நிராகரித்ததை தொடர்ந்து, ரஷ்யாவின் 2-வது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர் மீது பெரியளவிலான டிரோன் தாக்குதல்களை உக்ரைன் நடத்தியுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரித்துள்ள ரஷ்யா, இணைய வசதி துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உரையின்போது இடையூறு :

பிரிட்டனில் இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சியில் இடையூறு ஏற்படுத்தியதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் தலைமை நீதிபதி பேசியபோது பெண் ஒருவர் எழுந்து, இந்தியாவில் கருத்து சுதந்திரத்தின் நிலை குறித்து கேள்வி எழுப்பினார்.

Related Link
AI பயன்படுத்தி உலகில் முதல் தடுப்பூசி  கண்டுபிடிப்பு

AI பயன்படுத்தி உலகில் முதல் தடுப்பூசி கண்டுபிடிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் முதல் வெற்றி

0
5 mins agoshare
Ind win








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau