Also Watch
Read this
By: Manigandan Raja

மனிதர்கள் மீது நடத்தப்பட்ட சோதனை வெற்றி :
AI பயன்படுத்தி பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி நடத்தப்பட்ட சோதனை வெற்றி பெற்றதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வைரஸ்கள் உருமாற்றம் அடைந்தாலும் அதிலிருந்து மனிதர்களை பாதுகாக்கும் விதமாக தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
அதிபர் மாளிகையில் உறங்கி கொண்டிருந்த டிரம்ப்?

அமெரிக்காவில் முக்கிய கூட்டத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் தூங்கி வழி வதை போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.
வாஷிங்டனில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது கண்களை மூடிய டிரம்ப், அப்படியே தலையை சாய்த்த வீடியோ வெளியாகியிருக்கிறது.
உக்ரைன் போரில் பயன்படுத்தப்படும் கடல்சார் ட்ரோன்
உக்ரைன் போரில் பயன்படுத்தப்படும் கடல்சார் ட்ரோன் ஒன்று, ருமேனியாவின் கருங்கடல் துறைமுகமான கான்ஸ்டான்டாவில் உள்ள ஒரு எண்ணெய் முனையத்திற்கு அருகே தானாகவே வெடித்துச் சிதறிய அதிர்சியூட்டும் காட்சி வெளியாகியுள்ளது.
சிறிய உல்லாசப் படகுகள் மீன் பிடி படகுகளாக மாற்றம் :
இஸ்ரேலிய கட்டுப்பாடுகளால் ஃபைபர் கிளாஸ் விலை கட்டுப்படியாகாத நிலையில், காசா மக்கள் இடிபாட்டுக் கழிவுகளை மறுசுழற்சி செய்து, சிறிய உல்லாசப் படகுகளை மீன்பிடிப் படகுகளாக மாற்றி மீன்பிடித்து வருகின்றனர்.
போருக்கு முன்பு குடும்பங்கள் மற்றும் நீச்சல் வீரர்களால் பயன்படுத்தப்பட்ட அந்தச் சிறிய படகுகள், தற்போது மீன்பிடித் தொழிலுக்கு ஒரு முக்கிய வாழ்வாதாரமாக மாறியுள்ளன.
7 ஆண்டுகளுக்கு பிறகு சீனா அதிபர் வடகொரியா பயணம் :

7 ஆண்டுகளுக்கு பிறகு சீனா அதிபர் ஷி ஜின்பிங் வரும் 8ம் தேதி முதல் இரண்டு நாள் பயணமாக வட கொரியாவுக்குச் செல்கிறார். வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னைச் சந்திக்கு சீனா அதிபர், இருதரப்பு உறவுகள் மற்றும் பொதுவான கவலைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.