Also Watch
Read this
By: Web Team

அமெரிக்காவின் மின்னபோலீஸ் பகுதியில் உள்ள கத்தோலிக்க பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். பள்ளிக்கு மாணவர்களும் அவர்களது பெற்றோரும் வந்திருந்த போது, திடீரென்று மர்ம நபர் ஒருவர் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved