Also Watch
Read this
By: Web Team

பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்ட WSJ ஊடகத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக சாடினார்.
ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலின் பதவிக்காலம் 2026 ம் ஆண்டு மே மாதம் முடிவடைய உள்ள நிலையில் அவர் முன்கூட்டியே பதவி நீக்கப்பட்டால் ஏற்படும் சட்ட சிக்கல்கள் மற்றும் அரசியல் அபாயங்கள் குறித்து கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் அதிபர் டிரம்பிற்கு அறிவுறுத்தியாக கூறி WSJ செய்தி வெளியிட்டது.
இது உண்மையற்றது என்ற டிரம்ப், பவலை நீக்குவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து யாரும் தனக்குச் சொல்ல வேண்டியதில்லை என்றும் அமெரிக்காவிற்கு எது நல்லது என்பதை மற்றவர்களை விட தனக்கு நன்றாகத் தெரியும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved