இந்தியா

கேரளாவிலிருந்து கோழிகள், முட்டைகள் கொண்டு வர தடை

கேரளாவிலிருந்து கோழிகள், முட்டைகள் கொண்டு வர தடை

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கோழிகள், வாத்துகள், முட்டைகள், கோழி தீவனங்கள் கொண்டு வர தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியில் உள்ள பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அதன் தாக்கம் தமிழகத்திலும் இருக்கலாம் என அஞ்சப்படுவதால், தமிழக-கேரளா எல்லையை ஒட்டியுள்ள 12 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரபடுத்த தமிழக கால்நடை பராமரிப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளித்து தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், 26 எல்லைப் பகுதிகளில் சிறப்பு முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.
 

00 Comments

Leave a comment