இந்தியா

திருப்பதி மலைப்பாதை ட்ரோன் மூலம் படம் பிடிப்பு வீடியோ எடுத்த ராணுவ அதிகாரி போலீசில் ஒப்படைப்பு

திருப்பதி மலைப்பாதை ட்ரோன் மூலம் படம் பிடிப்பு   வீடியோ எடுத்த ராணுவ அதிகாரி போலீசில் ஒப்படைப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்குஉட்பட்ட திருப்பதி அலிபிரியில் இருந்து 
மலைப்பாதை திருமலையில் ட்ரோன் கேமிராவில் வீடியோ பதிவு செய்ய பாதுகாப்பு 
காரணங்களால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 
தினேஷ் எனும் பக்தர்  தனது மனைவியுடன் சுவாமி தரிசனத்திற்கு பிறகு  திருப்பதி 
காரில் செல்லும் வழியில்  மலைப்பாதையில் 52 வது வளைவில் 
மொகல்லா மெட்டு மலையில் ட்ரோன் கேமிரா மூலம் வீடியோ எடுத்தனர். 
 இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து தேவஸ்தான விஜிலென்ஸ் 
அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் தினேஷ் 
மற்றும் அவரது மனைவியை திருமலை விஜிலென்ஸ் அலுவலகத்திற்கு அழைத்து சென்று 
விசாரனை செய்ததில் தினேஷ் இராணுவத்தில் எஸ்.பி. கேடர் அதிகாரி என்பதும் 
தேவஸ்தான நிபந்தனைகள் தனக்கு சரியாக தெரியாததால் இயற்கை காட்சிகளை வீடியோ 
எடுத்ததாக தெரிவித்தார். இதனையடுத்து தினேஷை போலீஸ் விசாரனைக்கு ஒப்படைத்தனர். 
போலீசார்  தினேஷ் ட்ரோன் கேமிரா மூலம் வேறு எந்தந்த பகுதிகளை வீடியோ எடுத்தார் 
என்பது குறித்து குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தேவஸ்தானம் 
வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹரியானாவை சேர்ந்த தினேஷ் எனும் பக்தர் 
மலைப்பாதையில் லைட் வைட் நானோ  ட்ரோன் கேமிரா மூலம் வீடியோ எடுத்துள்ளார். 
தேவஸ்தான நிபந்தனைகள் தனக்கு தெரியாது என்று தெரிவித்த நிலையில் அவரிடம் 
போலீசார் விசாரித்து வருகின்றனர். அலிபிரி சோதனை சாவடியில் நானோ லைட் வைட் 
ட்ரோன் என்பதால் அதனை சோதனை அதிகாரிகள் கண்டுபிடிக்க முடியவில்லை என 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

00 Comments

Leave a comment