இந்தியா

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை

 

57 ஆண்டுகளாக பாலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமித்து வைத்துள்ள இஸ்ரேலுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை சர்வதேச நீதிக்கான நீதிமன்றம் விரைவில் விசாரிக்க உள்ளது. ஹேக் நகரில் இருக்கும் இந்த நீதிமன்றம் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விசாரணையை ஒரு வார காலம் நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.1967 முதல் கிழக்கு ஜெருசலேம், வெஸ்ட் பேங்க் மற்றும் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ளது குறித்து இந்த விசாரணையில் முக்கிய விவாதங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச விதிகளை மீறி தங்களது பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக பாலஸ்தீனியர்கள் தரப்பில் வாதம் நடக்கும். பாலஸ்தீனியர்களின் சுய ஆட்சி அதிகாரத்தை பறித்து, இனவெறி நடவடிக்கைகளில் இஸ்ரேல் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த விசாரணை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

00 Comments

Leave a comment